திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3908 | உபதேச ரத்னமாலை || ஆண்டாள் உடைய பெருமையை அருளிச் செய்கிறார் 24 | அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து | பதவுரை Show / Hideஅஞ்சு குடிக்கு -ஐந்து குடும்பம் –முதல் ஆழ்வார் -அயோ நிஜ குடும்பம் -என்று கொண்டு – எம்பெருமானுக்கு எண்ண தீங்கு வருகிறதோ என்று அஞ்சுகின்ற ஆழ்வார்களின் பதின்மரின் குடிக்கு – பின் திருவவதரித்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருப் பாண் ஆழ்வார் கலியன் ஆகியவரையும் கூட்டி பிரஜா பித்ருப்ய -வேதத்தில் ஓதப்பட்டதோர் கடனும் ஆழ்வார்கட்கு ஆண்டாளால் தீர்ந்தது என்கை – பெண்மையை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார்கள் –ஆண்டாள் இயற்கையிலே பெண்ணாய்ப் பிறந்து புருஷோத்தமனை அனுபவிக்கும் திறத்தில் சிறந்த உரிமை யுடையளானாது பற்றி -விஞ்சி நிற்கும் தன்மையளாய் -என்கிறார் –பருவம் நிரம்புவதற்கு முன்னமே-அவரைப் பிராயம் தொடங்கி- வானிடை வாழும் அவ்வானவர்க்கு -எனபது முதலான அருளிச் செயல்களால் பிஞ்சாய்ப் பழுத்தாள் என்கிறார் |