| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 391 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1 | கங்கை கங்கை என்ற வாசகத்தாலே,Gangai Gangai Endra Vaasagaththaaley - கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால் என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும். கடு வினை,Kadu Vinai - கடுமையான பாவங்களை களைந்திட கிற்கும்,Kalaindhida Kirkkum - ஒழிக்கவல்ல கரை மேல்,Karai Mel - கரையிலே கை தொழ நின்ற,Kai Thozha Nindra - (பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற கண்டம் என்றும்,Kandam Endrum - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய கடி நகர்,Kadi Nagar - சிறந்த நகரமானது (எதுவென்னில், தங்கையை,Thangaiyai - (இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய மூக்கும்,Mookkum - மூக்கையும் தமையனை,Thamaiyanai - அவளுடைய தமையனான ராவணனுடைய தலையும்,Thalaiyum - தலையையும் எங்கும்,Engum - நாட்டெங்கும் தன் புகழ்,Than Pugazh - தன்னுடைய கீர்த்தியே யாம்படி இருந்து,Erundhu - பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து அரசு ஆண்ட,Arasu Aanda - ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும் எம்,Em - எமக்குத் தலைவனுமான தாசரதி,Daasarathi - இராமபிரானுமாகிய எம் புருடோத்தமன்,Em Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய எமது இருக்கை,Emadhu Irukkai - வாஸஸ்தாநமாம். |