திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3910 | உபதேச ரத்னமாலை || மதுரகவிகள் உடைய திவ்ய பிரபந்தம் நாலாயிரத்தினுள் சேர்ந்தமை அருளிச் செய்கிறார் 26 | வாய்த்த திரு மந்த்ரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை -ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பர்யம் தேர்ந்து | பதவுரை Show / Hideஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்ய பிரபந்தங்கள் எல்லாம் எம்பெருமான் உடைய ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களைப் பரக்கப் பேசுவன திருமந்தரம் த்வயம் சரம ஸ்லோஹம்-ரஹஸ்ய த்ரய பொருள்களையே விவரிப்பனவாகும் நம பதார்த்தம் பாகவத சேஷத்வம் -காட்டுமே அத்தை கனக்கப் பேசும் கண்ணி நுண் சிறுத்தாம்பு அருளிச் செயல்களின் நடுவே சேர்த்து அருளினார்கள் நிறைந்த புகழை உடைய நம் பூர்வாசாரியர்கள் |