திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3913 | உபதேச ரத்னமாலை || 29 | எந்தை எதிராசர் இவ் வுலகில் எம் தமக்காக
வந்துதித்த நாள் என்னும் வாசியினால் -இந்தத்
திருவாதிரை தன்னின் சீர்மை தன்னை நெஞ்சே
ஒருவாமல் எப்பொழுதும் ஓர் | பதவுரை Show / Hideஒருவாமல் -இடைவிடாமல் ஓர் -சிந்தித்திரு ஆதி சேஷனே எம்பெருமானாராக திருவவதரித்து அருளினார் -இவர் நலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -இத்யாதிப்படியே எம்பெருமானுக்கு சகல வித கைங்கர்யங்களும் செய்து கொண்டு வாழ வேண்டி இருக்க அதை விட்டுப் பல பல கஷ்டங்களுக்கும் ஆஸ்பதமான இவ்விருள் தரும் மா ஞாலத்திலே திருவவதரித்து அருளினது நித்ய சம்சாரிகளான நம் போல்வாரைப் பிறவிக் கடலில் நின்றும் கை கொடுத்து எடுப்பதற்காகவே என்று அனுசந்தித்து இவரது திருவவதார திருநாளைக் கொண்டாட வேணும் என்று அருளிச் செய்கிறார் |