திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3921 | உபதேச ரத்னமாலை || 37 | ஓராண் வழியாய் யுபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் -பாருலகில்
ஆசை யுடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று
பேசி வரம்பறுத்தார் பின் | பதவுரை Show / Hideகீழ்ப்பாட்டில் நாத முனி முதலாம் நம் தேசிகரை-என்று அருளிச் செய்தவர் -எம்பெருமானாரை விசேஷித்து எடுத்துக் கூற வேண்டி அருளிச் செய்கிறார் ஆர்த்தி பிரபந்தத்தில் -மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தான் வாழியே -என்றபடி எம்பெருமானார் தமிழ் மறையை வளர்த்து அருளின பிரகாரங்களில் மிக முக்கியமான தொரு பிரகாரத்தை அருளிச் செய்கிறார் – பூர்வாசார்யர்கள் இவருக்கு முன்பே திவ்ய பிரபந்த வியாக்கியானங்களை இட்டருள வல்லவராய் இருந்தும் ஒருவரும் இட்டருள வில்லையே -உபதேசித்து வந்தார்கள் அத்தனை –அப்படி உபதேசித்தும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஒரு திரளாகக் கூட்டி உபதேசித்தமை இல்லையே – ஓராண் வழியடைவாகவே உபதேசம் நிகழ்ந்து வந்தது – எம்பெருமானார் இங்கனே வரம்பு இருக்கத் தகாது -இதனால் நம் ஸ்ரீ வைஷ்ணவ தர்சனம் சங்குசிதம் ஆகிறதே யல்லது விரிவு பெறுகின்றதில்லை -எனவே வரம்பை அறுத்து ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று வரம் அறுத்தார் -இதனாலே திருவாய் மொழிக்கு வியாக்கியானங்கள் விசேஷமாக அவதரிக்க இடம் உண்டாயிற்று -பிள்ளை லோகாசார்யர் முதலானோர் ரஹச்ய கிரந்தங்களை அருளிச் செய்து அருளிச் செயல் பொருளை வளர்த்து அருளினதற்கும் இத்தகையே எம்பெருமானார் நியமனமே மூலம் முன்புள்ளார் அநு வ்ருத்தி பிரசன்னாசார்யர்கள் -என்றும் -எம்பெருமானார் க்ருபா மாத்ர பிரசன்னாச்சார்யர் என்றும் நம் முதலிகள் அருளிச் செய்வார்கள் |