திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3927 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3927உபதேச ரத்னமாலை || 43
நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவி விட பின் பெரியவாச்சான் பிள்ளை யதனால் -இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளைச் சொன்னது இருப்பத்து நாலாயிரம்
பதவுரை Show / Hide
ஆவரு பத்தி மாறன் -ஆனந்த ரூபமாகப் பெருகி வந்த பக்தியை யுடையரான நம்மாழ்வார் அருளிச் செய்த –
வியாக்யானங்கள் அருள்வதற்கு பல காரணங்கள் உண்டு -பின்புள்ளார் உஜ்ஜீவன அர்த்தமாக –
-ஸ்வ ஆச்சார்யர் உபன்யசித்து அருளும் அர்த்த விசேஷங்கள் பெருக்காறு போல் அன்றிக்கே அதிலே தேங்கின மடுக்கள் போலே
விளங்க வேணும் என்றும் -ஸ்வ ஆசார்யர் நியமித்து அருள -தமது புலமையை காட்டி வைக்கவும்
இங்கே நம்பிள்ளை உடைய பரம கருணா பிரயுக்தமான நியமனத்தால் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இட்டு அருளினார்