திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3928 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3928உபதேச ரத்னமாலை || 44
தெள்ளியா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திரு வீதிப் பிள்ளை யிந்த நாடறிய மாறன் மறைப் பொருளை நன்குரைத்தது ஈடு முப்பத்தாறாயிரம்
பதவுரை Show / Hide
தெள்ளியது ஆ செப்பு நெறி தன்னை -தெளிவாக அருளிச் செய்த ஸ்ரீ ஸூக்தி க்ரமத்தை உட்கொண்டு
நம்பிள்ளை உபன்யாசத்தைப் பகல் எல்லாம் கேட்டு இருந்து ஈடு -ஏடு படுத்தி வைத்தவர் வடக்குத் திரு வீதிப் பிள்ளை –
நம்பிள்ளை நியமனம் படியாக எழுதவில்லை -நம்பிள்ளை தாரும் என வாங்கி பிறகு பகவன் நியமனத்தாலே பிரசாரத்திற்கு அருளும்படி யாயிற்று
வள்ளல் -ஈடு ஏடு படுத்திய வள்ளல் தனம் -உலகுக்கு உயிர் போன்ற பிள்ளை லோகாசார்யர் – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இரண்டு
திரு புத்ர ரத்னங்களையும் பெற்று உதவியது பற்றியும் வள்ளல் தன்மை உண்டே