திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3932 | உபதேச ரத்னமாலை || 48 | சீரார் வடக்குத் திரு வீதிப் பிள்ளை எழுது
ஏரார் தமிழ் வேதத்து ஈடு தன்னைத் -தாருமென
வாங்கி முன் நம்பிள்ளை ஈயுண்ணி மாதவர்க்குத்
தாம் கொடுத்தார் பின்னதனைத் தான் | பதவுரை Show / Hideவடக்குத் திருவீதிப் பிள்ளை பட்டோலை கொண்டு நம்பிள்ளை சந்நிதியிலே கொண்டு போய் வைத்து அருளினார் – அதை அவர் கடாஷித்து -ஆனை கோலம் செய்தால் போலே அழகியதாகவே காண்கிறது -ஆகிலும் நமது கட்டளை இன்றிக்கே எழுதினீர்- இருக்கட்டும் என்று சொல்லி அந்த ஸ்ரீ கோசத்தை உள்ளே வைத்து அருளினார் பெரிய பெருமாள் உடைய நியமனத்தால் அன்றி நம்பிள்ளை இந்த ஸ்ரீ கோசத்தை தந்து அருளார் என்று தெரிந்து கொண்ட ஈ யுண்ணி மாதவப் பெருமாள் -இந்த ஈடு வியாக்யானம் உலகில் பிரசாரம் பெற வேணும் என்று ஆவல் கொண்டு பலகாலம் பெரிய பெருமாளை வலம் செய்து வந்தார் –பெரிய பெருமாள் திரு உள்ளம் உவந்து இரங்கி நம் பிள்ளைக்கு நியமித்து அருளவே பின்பு அந்த ஸ்ரீ கோசத்தை ஈந்து அருளினார் – |