திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3933 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3933உபதேச ரத்னமாலை || 49
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை தாம் கொடுத்தார் தம் மகனார் தம் கையில் -பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு அவர் தாம் நல்ல மகனார்க்கு அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு
பதவுரை Show / Hide
ஆங்கு அவர்பால் பெற்ற சிறியாழ்வானப் பிள்ளை தாம் – அவ்வண்ணமாக அந்த நம்பிள்ளை இடத்தில் பெற்றுக் கொண்டவரான
சிறியாழ்வான் அப்பிள்ளை என்கிற அவ்வாசிரியர் —ஈ யுண்ணி மாதவர் -என்றபடி
கொடுத்தார் தம் மகனார் தம் கையில் –தம்முடைய திருக் குமாரான பத்ம நாபப் பெருமாளுடைய திருக் கையில் அந்த ஈட்டைக் கொடுத்து அருளினார்
பாங்குடனே நாலூர் பிள்ளைக்கு கொடுத்தார் -அந்த பத்ம நாபப் பெருமாள் திரு உள்ளத்தில் இரக்கத்துடன் நாலூர் பிள்ளை என்னும் ஆசிரியர் இடம் கொடுத்து அருளினார் –
அவர் தாம் நல்ல மகனார்க்கு கொடுத்தார் -அந்த நாலூர் பிள்ளை தாம் தமது திருக் குமாரரான நாலூராச்சான் பிள்ளைக்கு அதைக் கொடுத்து அருளினார்
அவர் தாம் மேலோர்க்கு ஈந்தார் அவரே மிக்கு-அந்த நாலூராச்சான் பிள்ளையே அதிசயமாக மேல் உள்ளவர்களுக்கு உபதேசித்து அருளினார் –
ஈட்டுத் தனியனில் -இரு கண்னருக்கு அன்புடைய நம்பிள்ளை இவர் ஈடளித்தற்கு ஏய்ந்த மாதவர் பற்பநாபர் –என்பதையும்
வந்தே மாதவ பத்மநாப ஸூமன கோலேச தேவாதிபான் -ஸ்லோஹமும் இங்கே அனுசந்திக்க யுரியது