திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3934 | உபதேச ரத்னமாலை || 50 | நம் பெருமாள் நம் ஆழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் -அன்புடையோர்
சாற்று திரு நாமங்கள் தான் என்று நன்னெஞ்சே
ஏத்து அதனைச் சொல்லி நீ இன்று | பதவுரை Show / Hideஸ்ரீ வசன பூஷணம் திவ்ய சாஸ்திரம் சீர்மையை அருளிச் செய்யத் தொடங்கி பிள்ளை லோகாசார்யருக்கு திருநாமம் வந்த வழியைக் காட்டி அருள -நம்பிள்ளைக்கு அந்த திருநாமம் வந்த வழியைக் காட்டும் முகமாக நம் உபபதமாக பெற்றவர்களின் கோஷ்டியை அருளிச் செய்கிறார் – நம் -பிரேம விஷய கார்யம் -இப்படி முன்னோர்கள் இவர்களது பெருமையைக் கண்டு அதற்குத் தக்க இட்டருளின திரு நாமங்களை உகந்து அனுசந்தித்து உஜ்ஜீவிக்க திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் – |