திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3937 | உபதேச ரத்னமாலை || 53 | அன்ன புகழ் முடும்பை யண்ணல் உலகாரியன்
இன்னருளால் செய்த கலை யாவையிலும் -உன்னில்
திகழ் வசன பூடணத்தின் சீர்மை யொன்றுக்கு இல்லை
புகழ் அல்ல இவ்வார்த்தை மெய் யிப்போது | பதவுரை Show / Hideஸ்ரீ வசன பூஷண திவ்ய சாஸ்த்ரமானது -சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத ரூப வேத சாரார்த்த சங்க்ரஹ வாக்ய ஜாதம் -என்கிறபடியே அறிய வேண்டும் அர்த்தம் எல்லாம் அழகாக நிரம்பப் பெற்றதாதலால் இது நிகர் அற்றது எனபது அர்த்தவாதம் அன்று -மெய்யுரையே -புகழ் அல மெய் -அதிசய உக்தி அன்று சத்யமானதே |