திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3939 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3939உபதேச ரத்னமாலை || 55
ஆர் வசன பூஷணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆர் அது சொல் நேரில் அனுடிப்பார் -ஓர் ஒருவர் யுண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாதது அன்றோ அது
பதவுரை Show / Hide
அது சொல் நேரில் அனுட்டிப்பார் ஆர் -அந்த வசன பூஷன கட்டளையில் அனுஷ்டிக்க வல்லவர்களும் இலர்
இது ஒரு மீமாம்ஸா சாஸ்திரம் -அறியவும் அனுட்டிக்கவும் மிகவும் அரிது
மனுஷ்யாணாம் சஹாஸ்ரேஷூ கச்சித் யத்தி சித்தயேயததாமாபி சித்தா நாம் கச்சித் மாம் வேத்தி தத்வத –
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அதிகாரி தரக் கூடுமே
குற்றம் செய்தவர்கள் பக்கல் பொறையும் கிருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும்
விஹித போகம் நிஷித்த போகம் போலே லோக விருத்தம் அன்று நரகஹேதுவும் அன்று ஆயிருக்கச் செய்தே ஸ்வரூப விருத்தமுமாய்
வேதாந்த விருத்தமுமாய் சிஷ்ட கர்ஹிதமுமாய் ப்ராப்ய பிரதி பந்தகமுமாய் இருக்கையாலே த்யாஜ்யம் -போன்றவை அனுஷ்டிக்க அரியனவே