திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 394 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
394பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4
இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர் தான் இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இரு கரை உல கிரைத்தாட கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-4
பதவுரை Show / Hide
இமவந்தம் தொடங்கி,Imavantham Thodangi - இமய மலையின் உச்சி முதற் கொண்டு
இரு கடல் அளவும்,Eru Kadal Alavum - பெரிய கடல் வரைக்கும்
இரு கரை,Eru Karai - இரண்டு கரைகளிலுமுள்ள
இரைத்து,Eraiththu - ஆரவாரித்துக் கொண்டு
ஆட,Aada - நீராட
கமை உடை பெருமை,Kamai Udai Perumai - (அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய
கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையில்
கண்டம் என்னும் கடிநகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது
இமையவர்,Emaiyavar - (இந்திரன் முதலிய) தேவர்கள்
இறுமாந்து இருந்து,Erumaanthu Irundhu - அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து
அரசு ஆள,Arasu Aala - ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும்,
ஏற்று வந்த எதிர் பொரு சேனை,Etrru Vandha Edhir Poru Senai - துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது
நமபுரம்,Namapuram - யமலோகத்தை
நணுக,Nanuga - கிட்டுகைக்காகவும்
நாந்தகம்,Naandhagam - நந்தகமென்னும் வாளை
விசிறும்,Visirum - வீசா நிற்குமவனும்
நம்,Nam - நமக்குத் தலைவனுமான
புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய
நகர்,Nagar - நகரமாகும்.