திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3941 | உபதேச ரத்னமாலை || 57 | தேசிகர் பால் கேட்ட செழும் பொருளைச் சிந்தை தன்னில்
மாசறவே யூன்றி மனனம் செய்து -ஆசரிக்க
வல்லார்கள் தாம் வசன பூஷணத்தின் வான் பொருளைக்
கல்லாதது என்னோ கவர்ந்து | பதவுரை Show / Hideஆசார்யர்கள் இடத்தில் கேட்ட சிறந்த அர்த்தங்களை நெஞ்சிலே அழுக்கற ஊற்றமாக சிந்தனை செய்து அப்படியே அனுஷ்டிக்க வல்லவர்களான அதிகாரிகள் ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய திவ்யார்த்தங்களை அபி நிவேசத்துடனே அதிகரியாமல் இருப்பது ஏனோ -அந்தோ மா முனிகளுக்கு உலகோர் எல்லாரும் இந்த சாஸ்த்ரத்தை அதிகரிக்க வேணும் என்கிற அபி நிவேசம் விளங்கிற்று |