திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3943 | உபதேச ரத்னமாலை || 59 | சீர் வசன பூஷணத்தின் செம்பொருளைச் சிந்தை தன்னால்
தேறிலுமாம் வாய் கொண்டு செப்பிலுமாம்–ஆரியர்காள்
என்தனக்கு நாளும் இனிதாகா நின்றதையோ
உம்தமக்கு எவ்வின்பம் உளதாம் | பதவுரை Show / Hideநைச்ய அனுசந்தானத்தால் மா முனிகள் -ஒ மஹா நீயர்களே -ஸ்ரீ வசன பூஷணத்தின் உடைய செவ்விய பொருள்களை நெஞ்சினால் ஆராய்ந்து பார்க்கிலுமாம் எடுத்து உரைக்கிலுமாம் எனக்கு அப் பொழுதைக்கு அப் பொழுது என்னாராவமுதம் என்னலாம் படி உள்ளது -மிக ஆனந்தம் -உங்களுக்கு எப்படிப்பட்ட ஆனந்தமாய் இருக்கின்றதோ – செம் பொருளை -சரியான பாடம் -செழும் பொருளை -வெண்டளை பிறழும் |