திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3945 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3945உபதேச ரத்னமாலை || 61
ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே யுடைய னான குருவை அடைந்தக்கால் -மா நிலத்தீர் தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்
பதவுரை Show / Hide
ஆசார்ய பக்தி அவசியம் என்றது கீழ்ப் பாட்டில் -இதில் ஜ்ஞான அனுஷ்டான சம்பந்தனான ஆசார்யனைப் பணிந்தால் அன்றிப் பேறு பெற முடியாது என்கிறது
வண்டுகளோ வம்மின் -அஞ்சிறைய மடநாராய் -பல காலும் பஷிகளை விளிப்பார்கள்
உபாப்யாமேவ பஷாப்யாம் ஆகாசே பஷிணாம் கதி ததைவ ஜ்ஞான கர்ம்ப்யாம் ப்ராப்யதே புருஷோத்தம —
சேர்ப்பாரைப் பஷிகளாக்கி ஜ்ஞான கர்மங்களைச் சிறகு என்று -ஆசார்ய ஹ்ருதயம் ஸ்ரீ சூக்திகள்
தேனார் கமலத் திரு மா மகள் கொழுநன் -பிராட்டியின் புருஷகாரத்தாலே மோஷம் அளிக்க வல்லவன் -ஆயினும் சதாசார்யார்களை
ஆஸ்ரயியாதார்க்கு பிராட்டியின் புருஷகாரமும் பலிக்க மாட்டாது என்று காட்டின படி
ஆசார்ய ஆஸ்ரயணம் முக்யத்தைத்தை அருளவே தானே வைகுந்தம் தரும் -என்று பிராட்டி புருஷகாரம் இன்றி
ஸ்வயமாகவே வீடு தந்து அருள்வன் என்று காட்டி அருளுகிறார்