திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3949 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3949உபதேச ரத்னமாலை || 65
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் தேசாரும் சிச்சனவன் சீர் வடிவை -ஆசையுடன் நோக்குமவன் என்னு நுண் அறிவைக் கேட்டு வைத்தும் ஆர்க்கும் அந்நேர் நிற்கை யரிதாம்
பதவுரை Show / Hide
ஆசார்யரானவர் சிஷ்யனுடைய ஆத்மா ஸ்வரூபத்தை நோக்கி இருக்கக் கடவர் –
ஸ்வரூப ஜ்ஞானம் ஆகிற தேஜஸ் பொருந்திய சிஷ்யனானாவன் -அவ்வாச்சார்யர் உடைய திவ்ய மங்கள விக்ரஹத்தை
பக்தி உடன் பேணக் கடவன் என்கிற இந்த நுட்பமான விசேஷார்த்தத்தை ஸ்ரீ வசன பூஷணம் போன்றவற்றில் கேட்டு இருந்தாலும் கூட
ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் -சிஷ்யன் ஆசாரியனுடைய தேஹத்தை பேணக் கடவன் –
இரண்டும் இருவர்க்கும் ஸ்வரூபமாய் பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும்
ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி -போன்றவற்றை கேட்டும்
அவ்வழியில் நிஷ்டையோடு இருத்தல் எப்படிப் பட்டவர்களுக்கும் அருமைப் பட்டே இருக்கும் -எளிதன்று –