திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3952 | உபதேச ரத்னமாலை || 68 | நாத்திகரும் நற்கலையின் நன்னெறி சேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகரு மாமிவரை -ஓர்த்து நெஞ்சே
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர் | பதவுரை Show / Hideஅஜ்ஞனனான விஷய பிரவணன் கேவல நாஸ்திகனைப் போலே -ஜ்ஞானாவானான விஷய ப்ரவனணன் ஆஸ்திக நாஸ்திகனைப் போலே சாஸ்த்ரத்தில் ப்ராமாண்ய புத்தி இல்லாமல் தான் தோன்றியாகச் செய்து திரிகின்றவன் வெறும் நாஸ்திகன் – சாஸ்த்ரங்களை பிரமாணமாக இசைந்து ஆஸ்திகன் என்று சொல்லத் தக்கவநாயும் அந்த சாஸ்திர வரம்பில் அடங்காமல் தோன்றினபடியே செய்து திரிவது பற்றி நாஸ்திகனாமாயும் இருப்பவன் ஆஸ்திக நாஸ்திகன் எனப்படுவான் -ஆஸ்திகர்களே நமக்கு அநு வர்த்த நீயர்கள் -என்று அருளிச் செய்கிறார் |