திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3955 | உபதேச ரத்னமாலை || 71 | முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த யுபதேச பர
வார்த்தை என்பார் மூர்க்கராவார் | பதவுரை Show / Hideபூர்வர்கள் அருளிச் செய்தவற்றை முறை வழுவாமே சதாசார்யா சந்நிதானத்தில் கேட்டு உணர்ந்து -பின்பு அதை அப்படியே மனனம் பண்ணி தாங்கள் அதை அப்படியே பேச வேண்டியது ப்ராப்தமாய் இருக்க அங்கனம் பேசாமல் தமது உள்ளத்திலே தோற்றின தான் தோன்றி அர்த்தங்களையே சொல்லி இந்த அர்த்தமே சுத்த சம்ப்ரதாய உபதேச பரம்பரையாய் வரலுற்றது என்று பொய்யும் சொல்லுமவர்களே மூர்க்கர் எனத் தகுந்தவர்கள் – திருட பூர்வச்ருதோ மூர்க்க-பூர்வேப்ய ஸ்ருதம் –பூர்வ ஸ்ருதம் -த்ருடம் பூர்வ ஸ்ருதம் யஸ்ய ச திருட பூர்வஸ்ருத்த உக்தமாகவும் சாரமாகவும் தான் தோன்றியாக சொல்லி உலகை வஞ்சிப்பவரே மூர்க்கர் -என்று அருளிச் செய்கிறார் |