திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3957 (2 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3957உபதேச ரத்னமாலை || 73
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச் சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச் சதிராக வாழ்ந்திடுவர் தாம்
பதவுரை Show / Hide
-இப்பத்தும் உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் -போலே -இதுவே தெருள் தரும் மா ஞாலமாகி விடும் என்ற திரு உள்ளம் தோன்றும் –
எம்பெருமானார் திரு உள்ளாத்திற்கு உகப்பான விஷயங்களையே தொடுத்து அருளிச் செய்த இந்த சொல் மாலையைச் சிந்தையிலே
அணிந்து கொள்ளுமவர்க்கு எம்பெருமானாருடைய பரம கிருபையே பேறாகும் என்று பலன் அருளிச் செய்து தலைக் கட்டி அருளுகிறார்
3957உபதேச ரத்னமாலை || எறும்பி அப்பா அருளிச் செய்தது 74
மன்னுயிர்காள் இங்கே மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை -உன்னிச் சிரத்தாலே தீண்டின் அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடன்
பதவுரை Show / Hide
74 சிம்ஹாச நாபதிகள் -74 பாசுரங்கள் பாடி அருள மா முனிகள் திரு உள்ளம் -அவரையே தெய்வமாக கொண்ட
எறும்பி அப்பா இறுதி பாசுரம் பணித்து பெரிய பெருமாள் இடம் திருவடி பணிந்து பிரார்த்திக்க அப்படியே பகவன் நியமனம் ஆயிற்று
இந்த உடல் விட்டு இரவி மண்டலத்தூடு ஏகி –விரசை தனில் குளித்து அங்கு அமானவனால் ஒளிக் கொண்ட சோதியும் பெற்று -என்றபடி
முக்தி சாம்ராஜ்ய அனுபவத்துக்கு முன்னாக அமானவ கர ஸ்பர்சம் இன்றியமையாதது ஆகும் –
அது மா முனிகளின் பக்தர்களுக்கு நேருவது கடைமையாகும் -என்றும்
அது நேருவது அவசியம் அற்றது என்றும் இருவகைப் பொருளில் அருளிச் செய்கிறார்