திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 397 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
397பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7
விற் பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி மற் பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால் புரு டோத்தமன் வாழ்வு அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம்படிய ரொண் சாந்தும் கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-7
பதவுரை Show / Hide
அற்புதம் உடைய,Arpudham Udaiya - ஆச்சர்யமான
ஐராவதம்,Airaavatham - ‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய
மதமும்,Madhamum - மத நீரும்,
அவர்,Avar - அத் தேவர்கள் (விரும்பத் தக்க)
இள படியர்,Ela Padiyar - இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த)
கற்பகம் மலரும்,Karpagam Malarum - (அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும்
கலந்து,Kalandhu - ஒன்று சேர்ந்து
இழீ,Izhi - இழியா நின்றுள்ள
கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்
வில் பிடித்து இறுத்து,Vil Pidiththu Iruththu - (கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து.
வேழத்தை,Vezhaththai - (குவலயாபீடம் என்ற ) யானையை
முறுக்கி,Murukki - பங்கப்படுத்தியும்
மேல் இருந்தவன்,Mel Irundhavan - (அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய
தலை,Thalai - தலையை
சாடி,Saadi - சிதறப் புடைத்தும்
மல்,Mal - (சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு
பொருது,Porudhu - போர் செய்தும்
அரயைனை,Arayainai - உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை
எழப் பாய்ந்து உதைத்த,Ezha Paayndhu Udaiththa - அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான
என் புருஷோத்தமன் வாழ்வு,En Purushoththaman Vaazhvu - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம்.