| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 399 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9 | தட வரை,Thada Varai - (மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை அதிர,Athira - சலிக்கும் படியாகவும் காணி,Kaani - பூமியானது விண்டு இடிய,Vindu Idiya - பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும் தலைப் பற்றி,Thalaip Patri - (மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி கரை,Karai - கரையிலுள்ள மரம்,Maram - மரங்களை சாடி,Saadi - மோதி முறித்தும் இடம் உடை,Edam Udai - இடமுடையத்தான் (விசாலமான) கடல்,Kadal - (ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட கலங்க,Kalanga - கலக்கும்படி கடுத்து,Kaduthu - வேகங்கொண்டு இழி,Ezhi - இழியா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கா தீரத்திலுள்ள கண்டம் என்னும் படி நகர்;,Kandam Ennum Padi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது வட திசை,Vada Thisai - வடக்கிலுள்ள மதுரை,Mathurai - ஸ்ரீ மதுரையும் சாளக்கிராமம்,Saalakkiraamam - ஸ்ரீ ஸாளக்ராமமும் வைகுந்தம்,Vaikuntham - ஸ்ரீவைகுண்டமும் துவரை,Thuvaarai - ஸ்ரீத்வாரகையும் அயோத்தி,Ayoththi - திருவயோத்தையும் இடம் உடை,Edam Udai - இடமுடைத்தான (விசாலமான) வதரி,Vathari - ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை இடவகை உடைய,Edavagai Udaiya - வாஸஸ்தானமாக வுடையனான எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |