| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 40 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 18 | மண்ணும் மலையும் கடலும் உலகேழும் உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை திண்ணம் இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே–1-2-18 | மண்ணும்,Mannum - பூமியையும் மலையும்,Malayum - மலைகளையும் கடலும்,Kadalum - கடல்களையும் உலகு எழும்,Ulagu ezhum - ஸப்தலோகங்களையும் உண்ணுந்திறந்து,Unnundhirandhu - திருவயிற்றிலே வைக்கிறவளவில் மகிழ்ந்து,Magizndhu - உகந்து உண்ணும்,Unnum - திருவயிற்றிலே வைத்த பிள்ளைக்கு,Pillaiyukku - (இக்) கண்ணபிரானுடையதான எழில் வண்ணம் கொள்,Ezhil vannan kol - அழகிய நிறங்கொண்ட மகரம் குழை இவை,Magaram kuzai ivai - இம்மகர குண்டலங்களின் திண்ணம் இருந்த காணீரே ,Thinnam irundha kaaneere - திண்மை இருந்தபடியை காணீர் சேயிழையீர்! காணீரே,Seyizhaiyeer! Kaaneere - சேயிழையீர்! வந்து காணீர்!! |