| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 401 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல் வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11 | இத்திருமொழி,Iththirumozhi - நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும் ஒலி,Oli - கோபத்தை உடையதுமான கங்கை கரை,Gangai Karai - கங்கைக் கரையிலுள்ளதும் மலி,Mali - எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான. கண்டத்து,Kandaththu - திருக் கண்டங் கடி நகரில் புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தப் பெருமானுடைய அடி மேல்,Adi Meel - திருவடிகளில், வெம்கலி நலியா,Vemkali Naliya - கொடிய கலியினால் நலியப் பெறாத வில்லிபுத்தூர் கோன்,Villipuththoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விருப்புற்ற,Viruppu Utra - ஆசைப் படல் தங்கிய அன்பால்,Thangiya Anbaal - நிலை நின்ற பக்தியினால் செய்,Sey - அருளிச் செய்த தமிழ் மாலை,Thamizh Maalai - இத்திருமொழி தங்கிய,Thangiya - நிலை நின்றிருக்கப்பெற்ற நா உடையார்க்கு,Naa Udaiyaarkku - நாக்கை உடையவர்களுக்கு கங்கையில்,Gangaiyil - கங்காநதியில் குளித்து,Kuliththu - நீராடி திருமால்,Thirumaal - ஸ்ரீயபதியினுடைய இணை,Inai - ஒன்றொடொன்றொத்த கழல் கீழே,Kazhal Keezhe - திருவடிகளின் கீழே இருந்த கணக்கு ஆம்,Irundha Kanakku Aam - நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும். |