திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 4011 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
4011திருவாய்மொழி நூற்றந்தாதி || ஐம்பத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், கண்ணன் எம்பெருமானின் எல்லா லீலைகளையும் அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 54
குரவை முதலாம் கண்ணன் கோலச் செயல்கள் இரவு பகல் என்னாமல் என்றும் – பரவு மனம் பெற்றேன் என்றே களித்துப் பேசும் பராங்குசன் தன் சொல் தேனில் நெஞ்சே! துவள்
பதவுரை Show / Hide
நெஞ்சே! கண்ணன் எம்பெருமானின் ராஸக்ரீடை முதலிய திவ்ய லீலைகளை இரவு பகல் என்று பாராமல் கொண்டாடக்கூடிய நெஞ்சைக் கொண்டிருப்பதைப் பெருமையுடன் பேசிய ஆழ்வாரின் தேன் போன்ற இனிமையான ஸ்ரீஸூக்திகளில் எப்பொழுதும் மூழ்கி இரு.