Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 402 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
402ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 1
மாதவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்
தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே –4-8-1
மறி,Mari - அலையெறியா நின்றுள்ள
கடல்வாய் போய்,Kadalvaai Poi - கடலிற் புகுந்து
மாண்டானை,Maandaanai - முதலைவாயி லகப்பட்டு உயிரொழிந்த
மாதவத்தோன் புத்திரன்,Maadhavaththon Puththiran - மஹா தபஸ்வியான ஸாந்தீபிணியினுடைய பிள்ளையை
ஒதுவித்த தக்கணையா,Othuvitha Thakkanaiyaa - (ஸாந்திபிகி தன்னை) அத்யாகம் பண்ணுவித்ததற்கு தக்ஷிணையாக
உரு உருவே,Uru Uruve - (அப்புத்திரன் மரணமடையும் போதுள்ள ரூபம் மாறாதபடி) யதா ரூபமாக
கொடுத்தான்,Koduththaan - (கொணர்ந்து) கொத்தருனின எம்பெருமானுடைய
ஊர்,Oor - திருப்பதியாவது;
தோதவத்தி,Thothavathi - பரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின வஸ்திரங்களை அணியா நிற்பவரும்
தூய் மறையோர்,Thooy Maraiyoor - நிர்த்தோஷ ப்ரமாணமான வேதத்தைத் தமக்கு நிரூபகமாக வுடையவருமான ஸ்ரீவைஷ்ணவர்கள்
துறை,Thurai - காவேரித் துறைகளில்
படிய,Padiya - அவகாஹிக்க (அதனால்)
எங்கும்,Engum - அக் காவேரி முழுதும்
துளும்பி,Thulumbi - அலை மோதப் பெற்று (அதனால் தாமரை மலர்களின் கானங்கள் அலைய)
போதில்,Pothil - (அந்தப்) பூக்களில்
வைத்த,Vaiththa - இரா நின்றுள்ள
தேன்,Then - தேனானது
சொரியும்,Soriyum - பெருகப் பெற்ற
புனல்,Punal - நீரை யுடைய
அரங்கம் என்பது,Arangam Enbathu - திருவாங்கமென்னுந் திருப்பதியாம்.