திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 4021 | திருவாய்மொழி நூற்றந்தாதி || அறுபத்துநான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் வெற்றிச் சரித்ரங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். 64 | ஆழி வண்ணன் தன் விசயம் ஆனவை முற்றும் காட்டி
வாழ் இதனால் என்று மகிழ்ந்து நிற்க – ஊழில் அவை
தன்னை இன்று போல் கண்டு தான் உரைத்த மாறன் சொல்
பன்னுவரே நல்லது கற்பார் | பதவுரை Show / Hideகடல்நிற வண்ணனான எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை ஆழ்வாருக்குக் காண்பித்து “இதை அனுபவித்து உம்மை தரித்துக் கொள்ளும்” என்று மகிழ்ச்சியுடன் இருந்தான். ஆழ்வார், முற்காலத்தில் நடந்த அந்த வெற்றிச் சரித்ரங்களை தற்போது நடப்பதுபோல் அனுபவித்து, அதற்கு வெளிப்பாடாக இப்பாசுரங்களை அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அனுஸந்திப்பவர்கள் உயர்ந்த வார்த்தைகளைச் சொன்னவர்களாகக் கருதப்படுவர். |