திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 404 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
404பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 3
மரு மகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் திரு முகமாய்ச் செங்கமலம் திரு நிறமாய்க் கருங்குவளை பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே–4-8-3
பதவுரை Show / Hide
மருமகன் தன்,Marumagan Than - மருமகனான அபிமன்யுவினுடைய
சந்ததியை,Sandhathiyai - புத்திரனான பரிஷித்தை
உயிர் மீட்டு,Uyir Meettu - மறுபடியும் உயிர் மீட்டு
மைத்துனன் மார்,Maiththunan Maar - மைத்துனன்னாரான பாண்டவர்களுடைய
உரு,Uru - சரீரமானது
மகத்து,Magaththu - (பாரதயத்தமாகிற) நரமேதத்திலே
வீழாமே,Veezhamae - விழுந்து அழிந்து போகாதபடி
குரு முகம் ஆய்,Guru Mugam Aay - ஆசார்ய ரூபியாய் (ஹித உபதேசங்களைப் பண்ணி)
காத்தான்,Kaaththaan - ரக்ஷித்தருளிய கண்ணபிரானுடைய
ஊர்,Oor - திருப்பதியாவது:
செம் கமலம்,Sem Kamalam - செந்தாமரை மலர்களானவை
திரு முகம் ஆய்,Thiru Mugam Aay - (பெரிய பெருமாளுடைய) திருமுகத்துக்குப் போலியாகவும்
கரு குவளை,Karu Kuvalai - நீலோத்பல புஷ்பங்கள்
திரு நிறம் ஆய்,Thiru Niram Aay - திருமேனி நிறத்துக்குப் போலியாகவும்
பொரு முகம் ஆய் நின்று,Poru Mugam Aay Nindru - (ஒன்றுக் கொன்று) எதிர் பொருகிற முகத்தை யுடைத்தாய் கொண்டு
அலரும்,Alarum - நீர்வளத்தையுடைய
புனல்,Punal - நீர் வளத்தை யுடைய அரங்கம் என்பது