திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 407 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
407பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 6
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர் தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி யணிந்து யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே–4-8-6
பதவுரை Show / Hide
கீழலகில்,Keezhlagil - பாதாள லோகத்திலுள்ள
அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை
கிழக்க இருந்து,Kizhakka Irundhu - அடக்கிடந்து
கிளராமே,Kilaramae - கிளம்ப வொட்டாதபடி
ஆழி விடுத்து,Aazhi Viduththu - திருவாழியாழ்வானை ஏவி
அவருடைய,Avarudaiya - அவ் வசுரர்களுடைய
கரு,Karu - கர்ப்பந்தமாக
அழித்த,Azhiththa - அழித்தருளினதாலும்
அழிப்பன்,Azhippan - சத்ருக்களைத் தொலைத் தருளுவதையே இயல்பாக வுடையவனுமான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது:
யாழ்,Yaazh - (வீணையினுடைய ஓசை போன்ற)
இன் ஓசை,In Osai - இனிய இசையையுடைய
வண்டு இனங்கள்,Vandu Inangal - வண்டுகளின் திரள்களானவை
தாமழை மடலூடு,Thaamazhai Madaloodu - (மலரத் தொடங்குகிற) தாழை மடல் முன்னே
உறிஞ்சி,Urinji - உடம்பை உரசிக் கொண்டு (புகுந்து)
தவள வண்ணப் பொடி,Thavala Vannapp Podi - (அம்மடலிலுள்ள)வெளுத்த நிறத்தையுடைய வண்ணத்தை
அணிந்து,Aninthu - உடம்படங்கலும் அணிந்து கொண்டு
ஆளம் வைக்கும்,Aalam Vaikkum - (அந்தக் களிப்பிலே) தெனதென என்று ஆளத்தி வைத்து பணிமிடமான
அரங்கம்,Arangam - திருவரங்கம்