| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 408 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 7 | கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர் தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு தெழிப்புடைய காவிரி வந்து அடி தொழும் சீரரங்கமே–4-8-7 | கொழுப்பு உடைய,Kozhuppu Udaiya - கொழுப்பை யுடையதும் செழு,Sezhu - செழுமை தங்கியதுமான குருதி,Kurudhi - ரத்தமானது கொழித்து,Kozhiththu - ஊற்று மாறாமல் கிளர்ந்து இழிந்து,Izhindhu - நிலத்தில் பரவி குமிழ்ந்து,Kumizhndhu - குமிழி கிளம்பி பிழக்கு உடைய,Pizhakku Udaiya - (பர ஹிம்சையாகிய) தீமைகளைச் செய்கிற அசுரர்களை,Asuraralai - அஸுரர்களை பிணம் படுத்த,Pinam Paduththa - பிணமாக்கி யருளின பெருமான்,Perumaan - எம்பெருமான் (எழுந்தருளி யிருக்கிற) ஊர்,Oor - திருப்பதியானது: தழுப்பு அரிய,Thazhuppu Ariya - (ஒருவரிருவரால்) தழுவ முடியாத சந்தனங்கள்,Santhanangal - சந்தந மரங்களை தடவரைவாய்,Thadavarai Vaai - பெரியமலைகளினின்று ஈர்த்துக் கொண்டு,Eerththuk Kondu - (வேரோடே பிடுங்கி) இழுத்துக் கொண்டு வந்து தெழிப்பு உடைய,Thezhippu Udaiya - (இவற்றைத் திருவுள்ளம் பற்றவேணும் என்று எம்பெருமானைப் பிராரத்திக்கின்றதோ என்னலாம்படி) இரைச்சலை யுடைய காவிரி,Kaaviri - திருக்காவேரி நதியானது அடி தொழும்,Adi Thozhum - (எம்பெருமானது) திருவடிகளைத் தொழுகையாகிற சீர்,Seer - சீர்மையைப் பெற்ற அரங்கம்,Arangam - திருவரங்க நகராம். |