Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 410 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
410ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || எட்டாம் திருமொழி - மாதவத்தோன் (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 1) தரவு கொச்சகக்கலிப்பா 9
குன்றாடு கொழு முகில் போல் குவளைகள் போல் குரை கடல் போல்
நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றாடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலை யணவி
மன்றூடு தென்றலுமாம் மதிளரங்க மென்பதுவே–4-8-9
குன்று ஆடு,Kundru Aadu - மலையினுச்சியிற் சார்ந்த
கொழு முகில் போல்,Kozhu Mugil Pol - நீர் நிறைந்த மேகம் போலவும்
குவளைகள் போல்,Kuvalaigal Pol - கரு நெய்தல் பூப்போலவும்
குரை,Kurai - ஒலி செய்யா நின்ற
கடல்போல்,Kadal Pol - கடல்போலவும்
நின்று ஆடு,Nindru Aadu - (களிப்பாலே) நின்று ஆடா நின்றுள்ள
மயில் கணம் போல்,Mayil Kanam Pol - மயில்களின் திரள்போலவும் (இரா நின்ற)
நிறம் உடைய,Niram Udaiya - வடிவழகை யுடையவனான
நெடுமால்,Nedumaal - எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற)
ஊர்,Oor - திருப்பதி யாவது
தென்றல்,Thendral - தென்றல் காற்றானது
குன்று,Kundru - (மலய) பர்வதத்திலுள்ள
பொழிலூடு,Pozhiloodu - சோலைகளினிடையிலே
அழைத்து,Azaiththu - அழைத்து
கொடி இடையார்,Kodi Idaiyaar - (அங்குள்ள பூத்களின் தாதுகளை அனைத்து பரிமளத்தைக் கொய்து கொண்டு) கொடி போன்ற இடையை யுடையரான பெண்களினுடைய
முலை,Mulai - (கலவைச் சாந்தணிந்த) முலைகளை
அணவி,Anavi - வியாபித்து
மன்றூடு,Mandru Oodu - (அந்தப் பரிமளத்துடனே) நாற்சந்திகளினூடே
உலாம்,Ulaam - உலாவப் பெற்ற மதிள் அரங்கம் என்பது