| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 412 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (முதல் பாட்டு மீண்ட எழுந்து அருளுமதுக்கு விஸ்வாசமாக ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு திருவடி நிலைகளை கொடுத்து போய் – தேவர்களுக்கு விரோதியான ராவணாதிகளை நிரசித்து -மீண்டு வந்து லோகத்தை ஆண்டு அருளினவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 1 | மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்து போய் வானோர் வாழ செரு உடைய திசைக் கருமம் திருத்தி வந்து உலகாண்ட திருமால் கோயில் திருவடி தன் திரு உருவமும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட வோசலிக்கும் ஒளி அரங்கமே –4-9-1 | தம்பிக்கு,Thambikku - சித்திர கூடத்தில் வந்த ப்ரபத்தி பண்ணின) பரதாழ்வானுக்கு மரவடியை ,Maravadiyai - (மலய) பர்வதத்திலுள்ள ஸ்ரீபாதுகைகளை வான் பணயம் வைத்து,Vaan Panayam Vaiththu - நன்றாக நம்புசைக்கு உரிய அடாக அளித்து வானோர் வாழ,Vaanor Vaazha - தேவர்கள் வாழும்படி போய்,Poy - (சித்திரக் கூடத்தைவிட்டு அவ்வருகே ) எழுந்தருளி செருஉடைய திசை கருமம்,Seru Udaiya Thisai Karumam - யுத்தத்துக்கு உரிய தெற்குத்திக்கில் செல்ல வேண்டிய காரியங்களை திருத்தி,Thiruththi - குறையறச்செய்து முடித்துவிட்டு வந்து,Vanthu - (பிராட்டியுடன் அயோத்திக்கு) எழுந்தருளி உலகு ஆண்ட,Ulagu Aanda - ராஜ்யபரிபாலநம் செய்தருளின திருமால்,Thirumaal - ச்சரியபதி (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலாவது; திரு அடி தன்,Thiru Adi Than - ஸர்வஸ்வாமியான் பெரிய பெருமாளுடைய திரு உருவும்,Thiru Uruvum - திருமேனி நிறத்தையும் திரு மங்கை,Thiru Mangai - பெரிய பிராட்டியருடைய மலர் கண்ணும்,Malar Kannum - மலர்ந்த திருக்கண்ணனின் நிறத்தையும் காட்டி நின்ற,Kaatti Nindra - பிரகாசிப்பியா நின்ற உரு உடைய,Uru Udaiya - அழகு பொருந்திய நீலம் மலர்,Neelam Malar - கறாநெய்தற் பூக்களானவை காற்று ஆட்ட சலிக்கும்,Kaatru Aatta Salikkum - காற்று அசைக்க அசைக்க கொண்டிருக்கப்பெற்ற ஒளி,Oli - ஒளிபொருந்திய அரங்கம்,Arangam - திருவரங்கம் |