| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 414 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (மூன்றாம் பாட்டு விரோதி நிரசன சீலனாய் -அடியார் ஆனவர்களை புநராவர்த்தி இல்லாதபடி ஸ்ரீ பரம பதத்தில் கொடு போய் வைத்து அடிமை கொள்ளுமவன் வர்த்திக்கும் தேசம் இது என்கிறார்) (ஏணி வாங்கி-தன்னுடைய உபாய பாவம் தவிர்த்து புருஷார்த்தம் பகவத் அனுபவம் அருளுவானே ) 3 | கருளுடைய பொழில் மருதம் கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும் உருளுடைய சகடரையும் மல்லரையும் உடைய விட்டோசை கேட்டான் இருளகற்றும் எரி கதிரோன் மண்டலத்தோடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி அருள் கொடுத்திட்டு அடியவரை ஆள்கொள்வான் அமருமூர் அணி அரங்கமே –4-9-3 | கருள் உடை,Karul Udai - (கிருஷ்ணனை நலிய வேணும் என்கிற) சீற்றத்தையுடையதும் பொழில்,Pozhil - (மன விழுப்புண்ணும்படி புறம்பே) சோலை செய்து நிற்பதுமான மருதும்,Marudhum - (இரட்டை) மருத மரங்களையும் சதம்,Satham - மிக்க கோபத்தையுடைய களிறும்,Kalirum - குலையாபீடத்தையும் பிலம்பளையும்,Pilampalaiyum - ப்ரலம்பாஸுரனையும் கடிய,Kadiya - மிகவும் க்ரூரான மாவும்,Maavum - குதிரை வடிவாய் வந்த நேசியையும் உருள் உடைய,Urul Udaiya - உருண்டுவந்த சகடினையாய்,Sakadinaiaay - சகடாஸுரனையும் மல்லரையும்,Mallaraiyum - மல்லர்களையும் உடையவிட்டு,Udaiyavittu - நிரஹித்தருளி ஓசை கேட்ட என்,Osai Ketta En - கீர்த்திபெற்றவனும் இருள் அகற்றும்,Irul Agatrum - இருளைப் போக்காநின்ற எறிகதிரேசன்,Erikathiresan - வீசுகின்ற கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தூடு,Mandalaththuudu - மண்டலத்தினுள்ளே அடியவரை,Adiyavarai - அடியார்களை ஏற்றி,Eatri - ஏறச்செய்து வைத்து,Vaiththu - (அங் கு நின்றும் அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதத்திற்குக் கொண்டுபோய்)(அங்கு அவர்களை) நிறுத்தி ஏணி வாங்கி,Eani Vaangi - தன்னுடைய உபாயத்வரகாரத்தைத் தவிர்த்து அருள் கொடுத்திட்டு,Arul Koduththittu - (அவர்கள் அவ்விடத்தில் நின்றும் மீளாமைக்கும் கைங்கரிய லாபத்திற்கு முறுப்பாக அவர்கள் பக்கல்) க்ருபைபண்ணி ஆட் கொள்வான்,Aat Kolvaan - அடிமை கொள்ளுமவனுமான எம்பெருமாள் அமரும்,Amarum - பொருந்தி எழுந்தருளியிருக்கிற ஊர்,Oor - திருப்பதியாவது அணி அரங்கம்,Ani Arangam - அழகிய திருவரங்கமாம். |