| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 416 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஐந்தாம் பாட்டு – ஸ்ரீ நாரத பகவானுக்கு தன் வைபவத்தை பிரகாசிப்பித்த ஸ்ரீ சர்வேஸ்வரன் -அவன் பக்கலிலே ஸ்தோத்ரம் பண்ணி வணங்க -கண் வளர்ந்த தேசம் இது என்கிறார்.) 5 | ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான் சேமமுடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் பூ மருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே –4-9-5 | ஆமை ஆய்,Aamai Aay - (ஸ்ரீநாரத் மஹர்ஷிக்குத் தன்னுடைய ஸர்வாதிகத்ததுவத்தை விளங்கச் செய்வதற்காக) (முதலில் கங்காஜலத்துக்குள்) ஆமையாயும் கங்கை ஆய்,Gangai Aay - (பின்பு அந்த ஆமைமுதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான) கங்கையாயும் ஆழ் கடல் ஆய்,Aazh Kadal Aay - (பின்பு அக்கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான) ஆழ்ந்து கடலாயும் அவனி ஆய்,Avani Aay - (பின்பு அக்கடலுக்கு இருப்பிடமான) பூமியாயும் அவனி அய்,Avani Ay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும் அரு வரைகள் ஆய்,Aru Varaigal Aay - (பின்பு) அப்பூமிக்கு ஆதாரமான) பெரியமலைகளாயும் நான்முகன் ஆய்,Naanmugan Aay - (பின்பு அம்மலைகளுக்கு ஸ்ருஷ்டிகர்த்தாவான) சதுர்முகனாயும் நால்மறை ஆய்,Naalmurai Aay - (பின்பு அச்சதுர்முகனுக்குத் தாரகமான) நான்கு வேதங்களாயும் வேள்வி ஆய்,Velvi Aay - (பின்பு வேதாந்தங்களுக்குப் பராபணமான) யாகங்களாகவும் தக்கணை ஆய்,Thakkanai Aay - (பின்பு அந்த யாகங்களுக்கு விர்யத்தைக் கொடுக்க வல்ல) தக்ஷிணையாகவும் தானும் ஆனான்,Thaanum Aanaan - (அந்த தக்ஷிணை முகமாக அனைவர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்தைக் கொடுக்கவல்ல அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனான) தானகவும், சேமம் உடை,Saemam Udai - (ப்ரஹ்மபாவணையில் நிஷ்ட்டையாகிற) க்ஷேமத்தையுடைய நாரதனார்,Naarathanar, Naradhar - ஸ்ரீநாரத பகவான் சென்று சென்று,Sendru Sendru - பலகாலும் எழுந்தருளி துதித்து,Thudiththu - ஸ்தோத்திரம் பண்ணி இறைஞ்சி,Irainji - வணங்கும்படி கிடந்தான்,Kidandhaan - பள்ளிகொண்டருள் பவனாகவும் இராநின்ற எம்பெருமானுடைய கோயில்,Koyil - கோயிலாவது புள் இனங்கள்,Pul Inangal - (அன்னம் முதலிய) பறவைக்கூட்டங்கள் பூ,Poo - (நீர்ப்பூ முதலிய) பூக்களில் மருவி,Maruvi - பொருந்தியிருந்து புள் அரையன்,Pul Araiyan - தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியினுடைய புகழ்,Pugazh - கீர்த்தியை குழறும்,Kuzharum - அநக்ஷரரஸமாகப் பேசாநிற்கப் பெற்றதும் புனல்,Punal - நீர்வளத்தையுடையதுமான அரங்கம்,Arangam - திருவரங்க நகராம் |