| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 417 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (ஆறாம் பாட்டு திரௌபதியை குழல் முடிப்பித்து –பாண்டவர்களை ராஜாக்கள் ஆக்கி -உத்தரா தநயனையும் உஜ்ஜீவிப்பித்தவன்- நித்ய வாசம் பண்ணுகிற தேசம் இது என்கிறார்.) 6 | மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும் உய்யக் கொண்ட உயிர் ஆளன் உறையும் கோயில் பத்தர்களும் பகவர்களும் பழ மொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் சித்தர்களும் தொழுது இறைஞ்சி திசை விளக்காய் நின்ற திருவரங்கமே –4-9-6 | மைத்துனன் மாரி,Maiththunan Maari - (தனது) மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய காதலியை,Kaathaliyai - பத்தினியாகிய த்ரௌபதியை மயிர் முடிப்பித்து,Mayir Mudippiththu - விரிந்த கூந்தலை முடியும் படி செய்தருளி அவர்களைளேயே,Avargalaiyeye - அப்பாண்டவர்களையே மன்னர் ஆக்கி,Mannar Aakki - அரசான்வித்தளியவனும் உத்தரை தன்,Uththarai Than - (அபிமந்யுவின் மனைவியான) உத்தரை என்பவளுடைய சிறுவனை,Siruvanai - மகனான (கருவிற் கரிக்கட்டையாயொழிந்த) பரிக்ஷித்தை உய்யக் கொண்ட,Uyyak Konda - உயிர்பெற்றெழுந்திருக்கும் படி செய்தருளியவனும் உயிர் ஆளன்,Uyir Aalan - எல்லா உயிர்கட்கும் தலைவனுமான எம்பெருமான் உறையும்,Urayum - எழுந்தருளயிருக்கிற கோயில்,Koyil - கோயிலாவது; பத்தர்களும்,Paththargalum - பக்தர்களும் பழ மொழி வாய் முனிவர்களும்,Pazha Mozhi Vaai Munivargalum - அநாதிவாக்காகிய வேதத்தை வாயிற்கொண்டுள்ள ரிஷிகளும் பரந்த நாடும்,Parantha Naadum - விசாலமான நாட்டிலுள்ள மற்றும் பலரும் சித்தர்களும்,Siththargalum - நித்திய முக்தர்களும் தொழுது இறைஞ்ச,Thozhuthu Irainja - அஞ்சாலி பண்ணி வணங்கும்படி திசை விளக்கு ஆய்நிற்கின்ற,Thisai Vilakku Aaynirkkinra - எல்லாத் திக்குகளுக்கும் விளக்காயிருக்கிற திருவரங்க நகராம் |