| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 419 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஒன்பதாம் திருமொழி - மரவடியை (திருவரங்கம் பெரியகோயிலின் பெருமை 2) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) (ஸ்ரீ மணவாள மா முனிகள் - வியாக்யானம்-அவதாரிகை) (எட்டாம் பாட்டு அதி க்ரூரரான ஹிரண்யனை அடர்த்து பிடித்து நிரசித்தவன் வர்த்திக்கிற தேசம் இது என்கிறார்.) 8 | உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்பு உறைக்க ஊன்றிச் சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலரத் தெழித்தான் கோயில் உரம் பெற்ற மலர்க் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட வரம் புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலை வணங்கும் தண் அரங்கமே –4-9-8 | மூலம் பற்றி,Moolam Patri - (தன்னுடைய) வலிமை நினைத்து (ச் செருக்குற்று) இரணியனை,Iraniyanai - இரணியாஸஷரனுடைய துப்புரிய மார்பு,Thuppuriya Maarbu - அழகிய மார்பை உகிர்நுதியாற் உறைக்க ஊன்றி,Ugirnuthiyaar Uraikka Oonri - நகங்களின் அணிகள் உள்ளே பொத்தும்படி (திருக்கைகளால்) பற்றிக்கொண்டு முடி,Mudi - (அவனது தலையிலுள்ள) கிரீடமானது இடிய,Idiya - பொடி படும்படியாகவும் கண்,Kan - கண்களானவை பிதுங்க,Pithunga - பிதுங்கும்படியாகவும் வாய் அரை,Vaai Arai - (வேதனை பொறுக்கமாட்டாமல்) வாய் விரியும்படியாகவும் சிரம்பற்றி,Sirampatri - தலையைப் பிடித்து நெரித்து தெழித்தான்,Thezhiththaan - (பிரஹலாதனுடைய விரோதியை முடித்தோமென்னும் மகிழ்ச்சியினால்) ஆரவாரம் செய்தருளின எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) கோயில்,Koyil - கோயிலானது; உரம் பெற்ற,Uram Petra - செழிப்புபொருந்திய கமலம் மலர்,Kamalam Malar - தாமரை மலர்களானவை உலகு அளந்த,Ulagu Alandha - மேலுலகை அளப்பதற்கு உயர்ந்த சே அடி போல்,Sey Adi Pol - திருவடியைப்போல் உயர்ந்து காட்ட,Uyarnthu Kaatta - உயர்ந்து விளங்க வரம்பு பெற்ற,Varambu Petra - வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும் காம்புங்> உற்ற,Kaambung Utra - காம்பு சேர்ந்து விளைந்து நிற்பதும் கதிர்,Kathir - கதிரையுடையதுமான செந் நெல்,Sen Nel - செந்நெல்லானது தான் சாய்த்து,Thaan Saiththu - தாள்களை நீட்டி தலை வணங்கும்,Thalai Vanangum - தலைவணங்கி நிற்கப்பெற்ற தண் அரங்கம்,Than Arangam - குளிர்ந்த திருவங்க நகராம். |