திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 423 | பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்துத் துணை யாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-1 | பதவுரை Show / Hideஅரங்கத்து,Arangaththu - திருவரங்கம் பெரிய கோயிலில் அரவு அணை,Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளியானே,Palliyanae - பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! துப்பு உடையாரை அடைவது,Thuppu Udaiyaarai Adaivathu - (அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது எல்லாம் சோர்வு இடத்து,Ellaam Sorvu Idaththu - ‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில் துணை ஆவர் என்றே,Thunai Aavar Endrae - தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ? ஒப்பு இலேன் ஆகிலும்,Oppu Ilaen Aagilum - (இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர் திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும், நீ ஆனைக்கு அருள் செய்தமையால்,Nee Aanaikku Arul Seithamaiyaal - தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால் நின் அடைந்தேன்,Nin Adaindhaen - (அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று) தேவரைச் சரணம் புகுந்தேன் எய்ப்பு,Eyppu - (வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது என்னை,Ennai - அடியேனை வந்து நலியும் போது,Vanthu Naliyum Podhu - கிட்டி வருந்துங்காலமாகிற அங்கு,Angu - அந்த சரம தசையில் நான்,Naan - அடியேன் உன்னை,Unnai - தேவரீரை ஏதும்,Aedhum - க்ஷண காலமாயினும் நினைக்க மாட்டேன்,Ninaikka Maattaen - நினைக்க முடியாதவனாவேன் இப்போதே,Eppodhe - (கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - (என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன் |