திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 426 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
426பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4
ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயா அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்ற லுற்ற அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-4
பதவுரை Show / Hide
ஒற்றை விடையனும்,Otrai Vidaiyanum - ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்,Naanmuganum - ப்ரஹ்மாவும்
உன்னை,Unnai - உன்னை
அறியா,Ariyaa - (உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே,Perumai Yoanae - பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி,Evarkku Vaazhnal Atrathu Endru Enni - இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்,Muttra Ulagu Ellaam - ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி,Neeyae Aagi - நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய,Moonru Ezhuththu Aaya - மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே,O Mudhalvane - ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
அஞ்ச,Anja - (பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு,Patral Utra Atraiyukku - பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும்.