| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 429 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7 | செம் சொல்,Sem Sol - ருஜுவான சொற்களை யுடைய மறை,Marai - வேதத்துக்கு பொருள் ஆகி நின்ற,Porul Aagi Nindra - அர்த்தமாயிருப்பவனும் தேவர்கள்,Thaevargal.Devargal - நித்திய ஸூரிகளுக்கு நாயகனே,Naayagane - தலைவனுமானவனே! எம்மானே,Emmaanae - எம்பெருமானே! எஞ்சல் இல்,Enjal Il - குறை வற்ற இன்,En - பரம போக்யமான உன்னுடை அமுதே,Unnudaiya Amudhe - எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே! ஏழு உலகும் உடையாய்,Ezh Ulagum Udaiyaai - உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே! என் அப்பா,En Appa - எனக்கு உபகாரகனானவனே! அரங்கத் தரவணைப் பள்ளியானே!;,Arangathth Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! வஞ்சம்,Vanjam - வஞ்சனை பொருந்திய உருவின்,Uruvin - ரூபத்தை யுடையவரான நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள் என்னை,Ennai - அடியேனை வலிந்து,Valindhu - பலாத்கரித்து நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்துக் கொண்டு பற்றும் போது,Patrum Podhu - பிடிக்கும் போது அஞ்சல் என்று என்னை காக்க வேண்டும்,Anjal Endru Ennai Kaakka Vendum - அஞ்ச வேண்டா என்று என்னை காக்க வேண்டும் |