| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 430 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | நான் ஏதும் உன் மாய மொன்ற றியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகே யென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மா மாயனே என் ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-8 | வான் ஏய்,Vaan Ey - பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற வானவர் தங்கள்,Vaanavar Thangal - நித்ய முக்தர்களுக்கு ஈசா,Eesaa - தலைவனே! மதுரை,Mathurai - திரு வட மதுரையில் பிறந்த,Pirantha - அவதரித்த மா மாயனே,Maa Maayaney.Mayane - மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே! என் ஆனாய்,En Aanaai - (பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே! அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே! நான்,Naan - அடியேன் உன் மாயம்,Un Maayam - உன் மாயைகளில் ஏது ஒன்றும்,Aethu Ondrum - யாதொன்றையும் அறியேன்,Ariyaen - அறிய மாட்டேன்; நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள் பற்றி,Patri - (என்னைப்) பிடித்து நலிந்திட்டு,Nalindhittu - (இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,) இந்த ஊன் புகு என்று,Endha Oon Pugu Endru - ‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று மோதும் போது,Modhum Podhu - அடிக்கும் போது அங்கு,Angu - அவ் விடத்தில் உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;,Unnai Naan Ondrum Ninaikka Maattaen - உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்; நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - நீ என்னை காக்க வேண்டும். |