திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 431 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
431பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே அன்று முதல் இன்றறுதியாக ஆதியஞ் சோதி மறந்தறியேன் நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-9
பதவுரை Show / Hide
குன்று,Kundru - கோவர்த்தந மலையை
எடுத்து,Eduththu - (குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை
காத்து,Kaaththu - ரஷித்தருளின
ஆயா,Aayaa - ஆயனே (கோபாலானே!)
கோ நிரை,Ko Nirai - மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே,Maeyththavaney - மேய்த்தருளினவனே!
எம்மானே,Emmaanae - எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே,Arangaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
அன்று முதல்,Andru Mudhal - (உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக,Indru Arudhi Aaga - இன்றளவாக
ஆகி,Aagi - ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி,Am Sothi - விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்,Marandhu Ariyaen - (அடியேன்) மறந்ததில்லை
நன்றும் கொடிய,Nandrum Kudiya - மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்காரர்கள்
என்னை,Ennai - என்னை
நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்து
வலிந்து,Valindhu - பலாத்கரித்து
பற்றும் போது அன்று,Patrum Podhu Andru - பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு,Angu - அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்,Nee Ennaik Kaakka Vendum - நீ என்னைக் காக்க வேண்டும்