| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 432 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும் ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10 | மாயவனை,Maayavanai - ஆச்சரிய சக்தி யுடையவனும் மதுசூதனனை,Mathusoothananai,Madusothanai - மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும் மாதவனை,Maadhavanai,Madhavanai - பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும் மறையோர்கள்,Maraiyorgal - வைதிகர்கள் ஏத்தும்,Eaththum - துதிக்கப்படுமவனும் ஆயர்கள் ஏற்றினை,Aayargal Eatrinai - இடையர்களுக்குத் தலைவனும் அச்சுதனை,Achchuthanai - (அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும் அரங்கத்து,Arangaththu - கோயிலில் அரவு அணை,Aravu Anai - சேஷ சயநத்தில் பள்ளியானை,Palliyanaai - கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி வேயர்,Vaeyar - தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும் புகழ்,Pugazh - புகழப் பட்டவரும் வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு மன்,Mann - நிர்வாஹருமான விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையான பத்தும்,Paththum - இப் பத்துப் பாசுரங்களையும் தூய மனத்தனர் ஆகி,Thooya Manaththanar Aagi - நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு வல்லார் தாம்,Vallaar Thaam - ஓத வல்லார்கள் தூய மணி,Thooya Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு ஆளர்,Aalar - அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.) |