திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 435 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
435பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3
நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே–5-1-3
பதவுரை Show / Hide
கண்டாய்,Kandaai - முன்னிலை யசைச் சொல்
திருமாலே,Thirumaalae - ச்ரிய: பதியானவனே!
நாரணா என்னும் இத்தனை அல்லால்,Naaranaa Enum Ithanai Allael - ‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய
நன்மை தீமைகள் ஒன்றும்,Nanmai Theemigal Ondrum - (வேறு) நன்மை தீமை ஒன்றையும்
அறியேன்,Ariyaen - அறிகிறேனில்லை.
புன்மையால்,Punnmaiyaal - (எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத் தனத்தினால்
உன்னை,Unnai - உன்னைக் குறித்து
புள்ளுவம் பேசி,Pulluvam Paesi - வஞ்சகமான சொற்களைச் சொல்லி
புகழ்வான் அன்று கண்டாய்,Pugazhvaan Andru Kandaai - புகழுவனல்லன் (அடியேன்)
உன்னை,Unnai - உன்னை
உண்ணும் ஆறு,Unnum Aaru - இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில்
ஒன்றும்,Ondrum - ஒரு வழியையும்
அறியேன்,Ariyaen - அறிந்தேனில்லை;
ஓவாறே,Ovaarae - (ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்)
நமோ நாராயணா என்பன,Namo Naaraayanaa Enbana - நமோ நாராணாய என்னா நின்றேன்
வன்மை ஆனது,Vanmai Aanaadhu - அடியேனுக்கு மிடுக்காவது
உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்,Un Koyilil Vaazhum Vaittanavan Enum - உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு