திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 436 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
436பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4
நெடுமையால் உலகேழு மளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக் குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவ தில்லை அடிமை யென்னு மக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத் தானே–5-1-4
பதவுரை Show / Hide
நெடுமையால்,Nedumaiyaal - (குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால்
உலகு எழும்,Ulagu Ezhum - எல்லா வுலகங்களையும்
அளந்தாய்,Alandhaay - அளந்தருளினவனே!
நின்மலா,Ninmalaa - பரிசுத்தமானவனே!
நெடியாய்,Nediyai - (அனைவர்க்கும்) தலைவனானவனே!
கொடுமை கஞ்சனை,Kodumai Kanjanai - கொடிய கம்ஸனை
கொன்று,Kondru - உயிர்க் கொலை செய்து,
நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே,Nin Thaathai Koatha Van Thalai Kol Viduththaane - உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில் பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே!
அடியேனை,Adiyenai - (உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை
அடிமை கொள்வதற்கு,Adimai Kolvadharku - கிங்கரனாகக் கொள்வதற்கு
ஐயுறு வேண்டா,Aiyuru Vendaa - ஸந்தேகிக்க வேண்டியதில்லை;
கூறை சோறு இல்லை,Koorai Sooru Illai - இக் கூறையையும் சோற்றையும்
வேண்டுவது இல்லை,Venduvathu Illai - (நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை;
அடிமை என்னும்,Adimai Ennum - அடிமை யென்ற
அ கோயின்மையாலே,A Koyinmaiyaale - அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால்
அவை,Avai - அக்கூறை சோறுகள்
அங்கு அங்கு,Angu Angu - அவ்வவ் விடங்களில்
போதரும்,Podharum - (தாமாகவே) கிடைக்கும்
கண்டாய்,Kandaai - (கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.)