திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 437 | பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம்
வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன்
நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5 | பதவுரை Show / Hideகேழல் ஒன்று ஆகி,Kezhal Ondru Aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு கோடு,Kodu - (தனது) கோரப் பல் நுனியில் மண் கொண்ட,Man Konda - பூமியைத் தாங்குகையாகிற கொள்கையினாளே,Kolgaiyinalae - கால பாவத்ந யுடையவனே குஞ்சரம்,Kunjcharam - (குவலயாபீடமென்ற) யானையானது வீழ,Veezha - முடியும்படி கொம்பு,Kombu - (அதன்) தந்தத்தை ஓசித்தானே,Osiththaanae - முறித்தெறிந்தவனே! தோட்டம்,Thottam - தோட்டமும் இல்லவள்,Illaval - மனைவியும் ஆ,Aa - பசுக்களும் தொழு,Thozhu - மாட்டுத் தொழுவமும் ஓடை,Odai - குளமும் துடவையும்,Thudavaiym - விளை நிலமும் கிணறும் இவை எல்லாம்,Kinarum Ivai Ellaam - கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும் வாட்டம் இன்றி,Vaattam Inri - குறைவில்லாமல் உன் பொன் அடி கீழே,Un Pon Adi Keezhae - அடியேன் உனது அழகிய திருவடியிலே வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்,Valaippa Vakuththu Kondirundhaen - திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன் எனக்கு,Enakku - (எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு நாடு மானிடத்தோடு,Naadu Maanidaththodu - நாட்டிலுள்ள மநுஷ்யரோடு அரிது,Aridhu - (ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்; பலர்,Palar - பல பேர் நச்சுவார்,Nachchuvaaar - (இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள் |