திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 439 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
439பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே–5-1-7
பதவுரை Show / Hide
வெள்ளை,Vellai - பால் மயமான
வெள்ளத்தின் மேல்,Vellaththin Mael - பெருக்கிலே
ஒரு பாம்பை,Oru Paambai - ஒப்பற்ற திருவனந்தாழ்வானை
மெத்தை ஆக விரித்து,Meththai Aaga Viriththu - படுக்கையாக விரித்து
அதன் மேலே,Adhan Maelae - அப் படுக்கையின் மீது
கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்,Kallam Niththirai Kolginra Maarkkam - (நீ) யோக நித்ரை செய்தருளும்படியை
காணலாம் கொல் என் ஆசையினாலே,Kaanalaam Kol En Aasaiyinaalae - காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால்,
உள்ளம் சோர,Ullam Soora - நெஞ்சு அழிய
உகந்து எதிர் விம்மி,Ugandhu Ethir Vimmi - மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி
உரோம கூபங்கள் ஆய்,Uroma Koopangal Aay - (உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று
கண்ண நீர்கள்,Kanna Neergal - கண்ணீர்
அணை,Anai - படுக்கையில்
துயில் கொள்ளேன்,Thuyil Kollen - உறங்கப் பெறுகிறேனில்லை;
யான்,Yaan - (இப்படிப்பட்ட) அடியேன்
உன்னை,Unnai - உன்னை
தத்துறும் ஆறு,Thaththurum Aaru - கிட்டும்வழியை
சொல்லாய்,Sollaai - அருளிச் செய்ய வேணும்.