| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 44 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 1 | மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான் மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!–1-3-1 | மாணிக்கம்,Maanikam - மாணிக்கத்தை கட்டி,Katti - (இரண்டருகும்) கட்டியும் இடை,Idai - நடுவில் வயிரம்,Vairam - வயிரத்தை கட்டி,Katti - கட்டியும் ஆணிப் பொன்னால்,Aanip ponnaal - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த,Seidha - செய்யப்பட்ட வண்ணம்,Vannam - அழகிய சிறு தொட்டில்,Siru thottil - சிறிய தொட்டிலை பிரமன்,Piraman - சதுர்முகனானவன் பேணி,Paeni - விரும்பி உனக்கு,Unakku - உனக்கு விடு தந்தான்,Vidu thandhaan - அனுப்பினான் மாணி குறளனே,Maani kuralane - ப்ரஹம்சாரி வாமநாவதாரம் பண்ணின கண்ணனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! வையம்,Vaiyam - உலகங்களை அளந்தானே,Alandhaane - (த்ரிவிக்ரமனாய்) அளந்தவனே! தாலேலோ!,Thaalelo - தாலேலோ! |