திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 440 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
440பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8
பதவுரை Show / Hide
காரணா,Kaaranaa - (உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே,Ennuvaar Idarai Kalaivaanae - (எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே!
மது சூதா,Madhu Soodhaa - மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே,Kari Kol Viduththaanae - கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!
கண்ணனே!,Kannaney - கண்ணனே!
வண்ணம்,Vannam - அழகிய
மால்,Maal - பெரிய
வரை,Varai - கோவர்த்தன மலை
குடை ஆக,Kudai Aaga - குடையாக (அமைய)
மாரி,Maari - மழையினின்றும்
காத்தவனே,Kaaththavanae - (பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே!
களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட,Atta - முடித்த
பிரானே,Piranae - உபகாரகனே!
ஏத்த அரு பெரு கீர்த்தியினானே,Eaetha Aru Peru Keerththiyinaanae - துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே!
எம்பிரானே,Empiraanae - எமக்குத் தலைவனே!
நான்,Naan - அடியேன்
உன்னை,Unnai - உன்னை
நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும்
நண்ணி,Nanni - ஆச்ரயித்து
ஏத்தும் நன்மை,Eaeththum Nanmai - துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்,Arul Sei - அருள் செய்ய வேணும்.