Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 441 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
441ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய்
உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே
எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9
நம்பனே,Nampanae - (ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே!
நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே,Navinru Eaetha Vallaargal Naadhanae - (ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்,Narasingham Adhu Aanaai - நரசிங்க அவதராம் செய்தருளினவனே!
உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு
கோன்,Kon - தலைவனே!
உலகு ஏழும்,Ulagu Eaazhum - எல்லா வுலகங்களையும்
அளந்தாய்,Alandhaai - (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே!
ஊழி ஆயினாய்,Oozhi Aayinaai - காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்,Mun - முன்னே
ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை
ஏத்தி,Eaethi - (திருக் கையில்) ஏந்திக் கொண்டு (எழுந்தருளி)
மா கம்பம்,Maa Kampam - மிக்க நடுக்கத்தை அடைந்த
கரி,Kari - கஜேந்திர ஆழ்வானுடைய
கோள்,Kol - சிறையை
விடுத்தானே,Viduththaanae - விடுத்தருளினவனே!
காரணா,Kaaranaa - ஜகத் காரண பூதனே!
கடலை,Kadalai - (திருப்பாற்) கடலை
கடைந்தானே,Kadaindhaanae - (தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்,Empiraan - எம்பிரானே!
என்னை,Ennai - அடியேனை
ஆளுடை,Aaludai - ஆட்படுத்திக் கொண்டவனும்
தேனே,Thaenae - தேன் போல் இனியனுமானவனே!
ஏழையேன்,Eaazhaiyaen - (உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை,Idarai - துன்பத்தை
களையாய்,Kalaiyaai - களைந்தருள வேணும்.