Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 443 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
443ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1
நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின்
மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1
நெய்க் குடத்தை,Neik Kudaththai - நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி,Patri - பற்றிக் கொண்டு
ஏறும்,Erum - (அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்,Erumbugal Pol - எறும்புகளைப் போல்
நிரந்து எங்கும்,Niranthu Engum - என்னுடைய உடம்பு முழுவதும் பரவி
கைக் கொண்டு,Kaik Kondu - (என்னை) வசப்படுத்தி
நிற்கின்ற ,Nirkkinra - (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற
நோய்காள்,Noigal - வியாதிகளே!
காலம்பெற,Kaalampera - விரைவாக
உய்ய,Uyya - (நீங்கள்) பிழைக்க வேண்டி
போமின்,Pomin - (என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள்
வேதம் பிரானார்,Vedham Piraanaar - (பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட,Paik Konda - பரம்பினை படங்களை யுடைய
பாம்பு அணையோடும்,Paambu Anaiyodum - திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட
வந்து புகுந்து ,Vandhu Pugundhu - எழுந்தருளி
மெய்,Mei - (எனது) சரீரத்தை
கொண்டு,Kondu - (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி
கிடந்தார்,Kidandhaar - (என் சரீரத்தை கொண்டு (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி (என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.